டிசம்பர், 10: பிட்காயினில் (Bitcoin) பிளாக் செயின் என்ற சங்கிலி தொடர் தொழில்நுட்பம் இருக்கிறது. அதாவது, தகவல்களை உள்ளடக்கிய பெட்டகம் (Black Chain Information Box System) அனைத்தும் ஒன்றோடு ஒன்று சங்கிலி போல தொடர்புடன் இருந்தாலும், அதில் உள்ள விபரங்கள் ஒவ்வொன்றிலும் வேறுபட்டு காணப்படும். நாம் வாங்கிய பொருளின் விபரத்தை ஹேக்கர் திருட முயற்சிக்கிறார் என்றால் அந்த தகவல்கள் பெட்டகத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் என்பது ஹேக்கருக்கு நன்றாக தெரியும்.
ஆனால், பெட்டகத்தின் சங்கிலி இணைப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக பிணைக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று காட்டிக்கொடுக்க இயலாத வகையில் பிணைத்து இருக்கும் என்பதால், ஹேக்கர் அப்பணத்தை திருடுவது கடினமான ஒன்றாகும். இதனால் பிட்காயினை ஹேக்கிங் செய்வது மிகவும் கடினமான செயல்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெறும் போதும், நமது வங்கிக்கணக்கில் இருந்து சரியான பணம் செல்கிறதா? என்பதை வங்கிகணினிகள் கண்காணிக்கிறது. வங்கியின் ஊழியர்களும் அதனை சரிபார்ப்பார்கள். ஆனால், பிட்காயினிலோ பரிவர்த்தனை தொடர்பான விபரம் வித்தியாசமாக இருக்கும்.
பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சியை பொறுத்தமட்டில் பயனர்கள் பரிவர்த்தனையை அங்கீகரிக்கப்படும் வங்கி ஊழியர்களாக செயல்படுகின்றனர். இதற்கு Miners / Proof of Work என்று பெயர். இதில், ஒரு பரிவர்த்தனை நடைபெற்றால் அத்தகவல் பிட்காயின் பயன்பாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் தெரிந்துவிடும். அதனால் தகவல்களை ஒவ்வொருவரும் சரிப்பார்களாம். ஆனால், பிழைகள் உள்ள பரிவர்த்தனையை அங்கீகரித்தால் ஏற்படும் விளைவை தடுக்கவே ஹேஷ் உதவி செய்கிறது. Indian Passport Visa: புறப்படலங்களா?.. பாஸ்போர்ட் விசா இல்லாமல் இந்தியர்கள் செல்ல அனுமதியுள்ள 58 நாடுகள் எவை?.. லிஸ்ட் இதோ..!
ரகசிய நம்பராக இருக்கும் ஹேஷ் (Bitcoin Hash) புதிரை போன்றது ஆகும். புதிருக்கான விடையை சரியாக முதலில் கூறுபவர் பிட்காயின் பரிவர்த்தனையை சரிபார்த்தவராக கருதப்படுவர். அவர்களே Miners என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பரிவர்த்தனையை அங்கீகரித்த பின்னரே, கருப்பு சங்கிலி பெட்டகம் தகவலை நிரந்தரமாக சேமிக்கும். இதனை யாராலும் மாற்றம் செய்ய இயலாது.
இந்த வேலையை செய்யும் நபர்களுக்கு ஊதியமாக கடந்த 2020 மே மாத தகவலின் படி 6.25 பிட்காயின் வழங்கப்பட்டது. 2 இலட்சத்து 10 ஆயிரம் பிட்காயின்கள் நிரம்பி Halving என்ற நிகழ்வு நடந்து மக்களுக்கு அவை சென்று சேர்ந்ததும் Miners க்கு சம்பளம் வழங்கப்படும். இதனால் அடுத்த Halving எப்போது நிகழும் என்பது அதன் பயனர்களுக்கே தெரியும்.
மைனர்களாக நானும் வேலை செய்கிறேன் என்று புறப்பட நினைத்தால், Hash-க்கான விடையை கண்டறிவது அவ்வுளவு எளிதான காரியம் இல்லை என்று தான் கூற வேண்டும். நிறைய கம்பியூட்டிங் பவர், மின்சார தேவை, அதற்காக யோசித்தல், சிந்தித்தல் என பிட்காயினுக்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்தி செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
Note: பிட்காயின் வாங்குவது/விற்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம். முதலீடுகளில் முறைகேடுகளும் இருக்கலாம். முதல் உங்கள் பணம் என்பதால் முழு ரிஸ்கும் உங்கள் பொறுப்பே. கவனத்துடன் இருப்பது எப்போது சாலச்சிறந்தது.