Template: Bitcoin

டிசம்பர், 10: நமது கணினியில் இருக்கும் பிட்காயின் (Bitcoin) செயலியை வைத்து ஒருவர் ஒரு பிட்காயினை பயனருக்கு அனுப்பி, அதே பிட்காயினை மற்றொரு பயனருக்கும் என இரண்டு முறை அனுப்புவது Double Spending என்று அழைக்கப்படும். இதுவும் மோசடி ஆகும். பிட்காயினுக்கான நெட்வொர்க்குடன் நாம் இணைந்துவிட்டால், நமக்கு என தனி உள்நுழைவு (Login Keys) தரவுகள் வழங்கப்படும்.

இவற்றில் Private Key என்று தருவதை யாரிடமும் கூறக்கூடாது. அதனை பாதுகாப்பாக வைக்க வேண்டும். நாம் நமது பிட்காயினை அனுப்ப விரும்பும் பயனருக்கு வழங்கிவிட்டு அவரிடம் கூறினால், பயனர் Login செய்து பிட்காயினை பெற்றுக்கொள்ளலாம். இது மிகவும் எளிதானது என்றாலும், அதன் பின்னால் உள்ள விஷயங்கள் பல ஆச்சரியத்தை தரும். US Citizens: இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் இங்கெல்லாம் செல்லவேண்டாம்.. எச்சரிக்கை கொடுத்த அமெரிக்கா., என்ன விஷயம் தெரியுமா?.! 

Crypto Currency Bitcoin

நமது பயனருக்கு 1000 பிட்காயின் வழங்கினால், நாம் அனுப்பிய விபரம் தகவலாக மாற்றம் செய்யப்பட்டு நெட்ஒர்க்கில் சேகரிக்கப்படும். ஆன்லைனில் பிட்காயின் கொடுத்து பொருள் வாங்கினால், அது குறித்த தகவலும் சேகரிக்கப்படும். இவ்வாறாக 1 மெகாபைட் அளவில் பிட்காயின் பரிவர்த்தனை தகவல் சேர்ந்ததும், அதனை டிஜிட்டல் தகவல் பெட்டகமாக மாற்றி பல புதிய பெட்டகம் அடுத்தடுத்து உருவாக்கப்படும்.

இவ்வாறாக ஒருமுறை பெட்டகம் உருவாகிவிட்டால் அதனை சடோஷி நினைத்தாலும் மாற்ற இயலாது. எந்த பயனரிடம் இருந்து யாருக்கு? எவ்வுளவு? எந்த நேரத்தில் பிட்காயின் அனுப்பி வைக்கப்படுகிறது என்ற தகவலோடு, புதுப்புது பரிவர்த்தனைக்கு புதிய ஆல்பா-நியூமெரிக் எண் உருவாக்கப்படும். இதற்கு ஹேஷ் என்று பெயர்.

Note: பிட்காயின் வாங்குவது/விற்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம். முதலீடுகளில் முறைகேடுகளும் இருக்கலாம். முதல் உங்கள் பணம் என்பதால் முழு ரிஸ்கும் உங்கள் பொறுப்பே. கவனத்துடன் இருப்பது எப்போது சாலச்சிறந்தது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 08:03 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).