ஜூன் 04, சென்னை (Chennai): உலகமே உற்றுநோக்கிய இந்தியா தேர்தல்கள் 2024 கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 01ம் தேதி வரை ஏழுகட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டது. ஜூன் 04ம் தேதியான இன்று ஒரேகட்டமாக முடிவுகள் வாக்கு எண்ணிக்கையின்படி அறிவிக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கைக்கு இந்திய அளவில் தேர்தல் அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர். இந்த தேர்தலில் மொத்தமாக 66.33% மக்கள் தேசிய அளவில் வாக்களித்து இருந்தனர். 543 தொகுதிகளில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர். INDIA GENERAL ELECTION RESULTS 2024: 2024 இந்தியா தேர்தல்கள்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. வெற்றிவாகை சூடபோவது யார்?..!
சூரத் பாஜக வேட்பாளர் முதல் வெற்றி: இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் (Surat Lok Shaba Constituency) பாஜக தொகுதி வேட்பாளரான முகேஷ் தலால் (Mukesh Dalal), தனது தொகுதியில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அவரை எதிர்த்து பிற வேட்பாளர்கள் யாரும் களமிறங்காத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவரின் வெற்றி உறுதியான நிலையில், இன்று அவருக்கான வெற்றிச் சான்று அளிக்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதியில், சூரத் தொகுதி தவிர்த்து உள்ள பிற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நிலேஷ் கும்பெனியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த பிற அனைவரும் தங்களின் வேட்பு மனுவை திரும்ப பெற்றதை தொடர்ந்து அங்கு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.