Arrest (Photo Credit: Pixabay)

மார்ச் 05, கரீம்நகர் (Telangana News): தெலுங்கானா மாநிலம், கரீம்நகரில் (Karimnagar) உள்ள சுட்டலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சுஷ்மிதா என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மகள் சுஷ்மிதாவின் காதல் விவகாரம் அவரது தாய் சாமந்திக்கு தெரியவந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், இதுகுறித்து தினமும் தன் மகளுடன் சண்டை போட்டு வந்துள்ளார். மகள் சுஷ்மிதாவை வீட்டை விட்டு வெளியே போகவும் அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளார். Himani Narwal Murder Case: காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு; உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி இதோ..!

கொலை முயற்சி:

இதனால் ஆத்திரமடைந்த காதலன் ராஜ்குமார், சுஷ்மிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது தாயை கோபமாக திட்டி சண்டைப் போட்டுள்ளர். மேலும், சாமந்தியின் கழுத்தை நெரித்து கொலை (Attempted Murder) செய்யவும் முயற்சித்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ராஜ்குமாரை தடுத்து நிறுத்தி, இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காதலன் கைது:

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரைக் கைது செய்தனர். மேலும், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.