Marriage (Photo Credit: Facebook)

பிப்ரவரி 04, சூரத் (Gujarat News): குஜராத்தின் சூரத்தில், உணவுப் பற்றாக்குறை காரணமாக மணமகனின் குடும்பத்தினரால் திருமண சடங்கு திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் ராகுல் பிரமோத் மஹ்தோ மற்றும் மணமகள் அஞ்சலி குமாரி இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் லட்சுமி ஹாலில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். திருமண தம்பதியினர் பெரும்பாலான சடங்குகளை முடித்திருந்தபோது, ​​விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு பற்றாக்குறை குறித்து மாப்பிள்ளை குடும்பத்தினர் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, திருமணத்தை நிறுத்தியுள்ளனர். Dowry Death: "அழகு இல்லை.. வேலை இல்லை.." கணவரின் சித்திரவதையால் பெண் பலி - கணவர் கைது..!

காவல்நிலையத்தில் திருமணம்:

மணமகனின் குடும்பத்தினரின் நடத்தையால் வருத்தமடைந்த மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவிக்காக காவல்துறையை அணுகி உள்ளனர். மஹ்தோ தன்னை திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் மணப்பெண் குமாரி காவல்துறையினரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மணமகளின் குடும்பத்தினருடன் பிரச்சினையைத் தீர்க்க மணமகனும் அவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இருவரின் குடும்பத்தார் முன்னிலையில் ராகுல் பிரமோத் மஹ்தோ மற்றும் மணமகள் அஞ்சலி குமாரிக்கு காவல்நிலையத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.