டிசம்பர், 11: இந்திய வகை உணவுகளில் (Indian Spicy Foods) காரம் இல்லாத உணவுகளை தேடி பிடித்துவிடலாம். எளிமையாக 10 நிமிடங்களில் தயாராகும் உணவுகளாக இருந்தாலும் சரி, அரைமணிநேரம் கடந்து தயாராகும் உணவுகளாக இருந்தாலும் காரம் என்பது இல்லாமல் இருக்காது. நமது உணவுகளில் காரம் பாரம்பரியமாக இணைந்தது (Chilly) ஆகும்.
அதனால்தான் வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் இந்தியா வந்தால் நமது காரசாரமான பாரம்பரிய உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மிளகே உலகளவில் காரமான பொருளாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனையும் புரிந்துள்ளது. இந்தியர்களில் பெரும்பாலானோர் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் ஆவார்கள்.
சாதரணமாக சாம்பார், ரசம், குழம்பு, பொரியல் போன்றவற்றுக்கு மிதமான காரத்தினை அவர்கள் விரும்பி சாப்பிட்டாலும், இறைச்சி, மீன் போன்ற உணவுகளை சமைக்கும் போது காரசாரமாக சாப்பிட்டு கொண்டாடுவார்கள். அவர்களுக்கு அது பிடித்தமானதாக இருந்தாலும், அன்றைய நாளில் காரம் குறைவாக சாப்பிடும் நபர்கள் சிக்கிவிட்டால் அவ்வுளவு தான். Mobiles Under Rs.15,000: ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகும் அட்டகாசமான மொபைல்கள் என்னென்ன?.. அசத்தல் அம்சங்களுடன் மொபைல் லிஸ்ட் இதோ.!
காரசாரமான உணவுகளை நாம் சாப்பிட்டால் வழக்கமாக கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து வருவதை கண்டிருப்போம். அதனைப்போல, மூக்கில் இருந்தும் நீர் பெருக்கெடுத்து ஓடிவரும். மிளகாய் போன்ற காரமான உணவுகளில் கேப்சைசின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இவை உடல் திசுவின் எரிச்சலை அதிகப்படுத்தி மூக்கில் இருந்து நீரினை வெளியேற்றுகிறது.
கடுகில் இருக்கும் அல்லில் ஐசோதியோசயனேட் வேதிப்பொருள் உணவின் காரத்தன்மைக்கு காரணம் ஆகிறது. இவ்வாறான காரங்கள் மூக்கின் சளி சவ்வினை எரிச்சலூட்டுவதால் மூக்கில் இருந்து நீர் வெளியேறுகிறது. தவிர்க்க இயலாத காரத்தினை சாப்பிட்டால், அதனை குறைக்க பால் அல்லது தயிர் குடிப்பது சிறந்தது. தண்ணீர் காரத்தினை கட்டுப்படுத்தாது. பாலில் கேசீன் என்ற புரதம் காரத்தின் அளவை கட்டுப்படுத்தும்.