UP Train Accident (Photo Credit: @SAM34043859 X)

ஜூலை 18, கோண்டா (Uttar Pradesh News): உத்தர பிரதேசம் மாநிலம், கோண்டா மாவட்டத்தில் சண்டிகர்-திப்ருகர் செல்லும் விரைவு ரயில் (Chandigarh Dibrugarh Express Train), மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக (Train Accident) தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து இன்று மதியம் 2.40 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இதில் பயணிகள் பலரும் விபத்தில் சிக்கிக்கொண்டனர். Beans Thengai Paal Poriyal Recipe: சுவையான பீன்ஸ் தேங்காய் பால் பொரியல் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும், தீயணைப்பு படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.