Visual from Video (Photo Credit: Twitter)

அக்டோபர் 13, புதுடெல்லி (New Delhi): இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் காரணமாக, இஸ்ரேலில் (Israel - Palestine War) பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேலிய மக்களை குறிவைத்து ஹமாஸ் (Hamas Terrorist) பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் அரசு (Govt of Israel) தன்னாட்டு மக்களை காப்பாற்றவும், பாலஸ்தீனிய நாட்டில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை கூண்டோடு வேரறுக்கவும் முடிவெடுத்து இராணுவத்தை (Israel Army) முழுவீச்சில் களமிறக்கி இருக்கிறது. அமெரிக்காவிடம் இருந்து ஆயுத உதவிகளையும் பெற்று வருகிறது.

இதனால் இஸ்ரேல் நாட்டில் தங்கியிருந்து வேலை பார்த்த வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள் உட்பட பலரும் தங்களின் உயிரை கையில் பிடித்து, சொந்த நாடு தங்களை மீட்க கோரிக்கை வைத்தனர். இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களும் (Indians), இந்திய அரசுக்கு (Govt of India) தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனையடுத்து, ஏற்கனவே இஸ்ரேல் அரசுடன் ஒன்றிணைந்து விபரங்களை உன்னிப்பாக கவனித்து வந்த இந்திய அரசு, உடனடியாக அங்குள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர Operation Ajay-ஐ செயல்படுத்தியது. #Breaking: கிருஷ்ணகிரி வணிகர் சங்க தலைவர், பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..! வீட்டில் நடந்த சோகம்.! 

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் இணையவழியிலும், அழைப்பு வழியிலும் இந்திய தூதரக (Indian Embassy in Israel) அதிகாரிகளால் ஒன்றிணைக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர். இன்று காலை முதற்கட்டமாக Operation Ajay-யின் முதல் மீட்பு விமானம் இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு, புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான முனையத்திற்கு வருகை தந்தது.

இஸ்ரேலில் இருந்து பத்திரமாக இந்தியா திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த இந்தியர்கள், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், தூதரக அதிகாரிகளுக்கும், தங்களை மீட்டு வந்த விமான குழுவினருக்கும் மனதார நன்றியை தெரிவித்தனர்.

தாங்கள் தாய் நாடு வந்த உற்சாகத்தில் விமானத்தில் இருந்தவாறு, "வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெ" போன்ற வசனங்களை உச்சரித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதற்கட்டமாக 212 இந்தியர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர். இவர்கள் டெல்லியில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லவிருக்கின்றனர். மாநில அரசு சார்பில் அவர்களை வரவேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.