Child Mobile Use (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 02, இந்தூர் (Madhya Pradesh News): இன்றைய இளம் தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் மொபைல் மற்றும் டிவியை (Mobile Phones And TV) அதிகமாக பயன்படுத்துகின்றனர். மொபைல் போனில் கேம் விளையாடுவது, தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது என தொடர்ந்து போனில் மூழ்கியுள்ளனர். இது பிற செயல்களின் கவனத்தை திசைதிருப்ப பெரிதும் வாய்ப்புள்ளது. அந்தவகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. Young Woman Raped: சினிமா ஆசைக்காட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; உதவி இயக்குனர் கைது..!

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் டிவி பயன்பாட்டை வீட்டில் தடை செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இரண்டு சகோதரர்கள் தங்கள் பெற்றோருக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி அன்று, சிறுவர்கள் இருவரும் பெற்றோர்கள் துஷ்பிரயோகம் செய்வதாக குழந்தைகள் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின்பேரில், பெற்றோர் மீது 342, பிரிவு 294, 323 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணைக்குப் பிறகு, மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றோருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.