Family Dies By Suicide: கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Family Dies By Suicide: கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!
Hanging | Death File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 11, இடுக்கி (Kerala News): கேரள மாநிலம், இடுக்கி (Idukki) மாவட்டத்தில் உள்ள உப்புதாரா பகுதியைச் சேர்ந்த தம்பதி சஜீவ் (வயது 38) - ரேஷ்மா (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சஜீவ், கட்டப்பனா பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதன் மூலம் ஆட்டோ வாங்கி ஓட்டி தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். சுமார் 7 மாதங்கள் தவணைத் தொகையை முறையாக செலுத்தி வந்த அவர், கடந்த மாதம் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், அவரால் தவணைத் தொகையை சரியாக செலுத்த முடியவில்லை. Viral Video: உயிரிழந்த தங்கையின் உடலை டூவீலரில் எடுத்துச்சென்ற சகோதரன்.. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதவிப்பு..!

தூக்கிட்டு தற்கொலை:

இதனையடுத்து, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், செல்போன் மூலம் தொடர்பு கொண்டும், நேரிலும் வந்தும் தவணைத் தொகையை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால், மிகவும் மனமுடைந்து போன அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் நேற்று (ஏப்ரல் 10) இரவு தூக்குபோட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார்.

நிதி நிறுவனம் மீது வழக்குப்பதிவு:

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணத்தை உறுதி செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

 

(The above story first appeared on LatestLY on Apr 11, 2025 03:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).