Gang Rape (Photo Credit: Pixabay)

மார்ச் 07, மூணாறு (Kerala News): கேரள மாநிலம், இடுக்கி (Idukki) மாவட்டத்தில் வண்டிபெரியாறு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் குமுளியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த பிரிஜித் (வயது 26), கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி குமுளியில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய்க்கு உடல்நிலை சரி இல்லை எனவும், அவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு பெற்றோர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். Indian Student Shot Dead: இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம மரணம்.. குடும்பத்தினர் சோகம்..!

இளம்பெண் பலாத்காரம்:

இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் அப்பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ரோஜாப்பூ கண்டம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அறையில் பிரிஜித் நண்பர் அரணக்கல்லைச் சேர்ந்த கார்த்திஷ் (வயது 25) இருந்தார். இருவரும் அப்பெண்ணை மிரட்டி, அடித்து துன்புறுத்தி பலாத்காரம் (Sexual Assault) செய்து, அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

இருவர் கைது:

இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், பதிவு செய்த ஆபாச வீடியோவை வெளியிடவோம் எனவும் மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, நடந்த சம்பவத்தை அப்பெண் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில், குமுளி காவல்துறையினர் பிரிஜித்தை சிவகங்கையிலும், கார்த்திஷை ஓசூரிலும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.