ஜூன் 13 , டெல்லி (New Delhi): இந்தியாவின் நம்பர் 1 உள்ளூர் செய்தி செயலிகளில் முதன்மையாக இருப்பது டெய்லிஹண்ட் (Dailyhunt). அதேபோல, இந்தியா முழுவதும் உள்ளூர் செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களில் ஒன் இந்தியா முதன்மை இடத்தை தக்க வைக்கிறது. டெய்லிஹன்ட் மற்றும் ஒன் இந்தியா (OneIndia.com) ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து டெல்லி காவல்துறையுடன் (Delhi Police) இணைந்து புதிய முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 2 ஆண்டு ஒப்பந்தத்தின் பேரில் சமூக வலைதள பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார தடுப்பு முயற்சிகளை டெய்லிஹன்ட் மற்றும் ஒன் இந்தியா நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ள. இதற்காக தங்களது வலிமை மிகுந்த சக்தியான பின்தொடர்பாளர்களை கொண்டு அதனை நிறைவேற்றவுள்ளார்.
இந்திய அளவிலும், உலகளவிலும் இந்தியர்களால் பெருமளவுக்கு பயன்படுத்தப்படும் செய்தி ஊடக செயலிகளில் டெய்லிஹன்ட் மற்றும் ஒன் இந்தியா நிறுவனங்கள் முதன்மையில் இருப்பதால், சமூக அக்கறை கொண்டு டெல்லி காவல் துறையினருடன் இணைத்து சமூக பணியை மேற்கொள்கின்றனர். Twitter DM: ட்விட்டர் வெரிஃபைட் நபர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட எலான் மஸ்க்.. இனி யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம்.!
இதுகுறித்து Eterno Infotech இயக்குனர் என். இராவணன் தெரிவிக்கையில், "நாங்கள் டெல்லி காவல் துறையுடன் இணைத்து பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறோம். நமது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி, அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். இதற்கு இளைஞர்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும்" என கூறினார்.
Dailyhunt: இந்தியாவில் நம்பர் 1 உள்ளூர் மொழி செய்திகளை வழங்கும் டெய்லிஹண்ட் நிறுவனம், நாளொன்றுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான செய்திகளை 15-க்கும் அதிகமான மொழிகளில் வழங்குகிறது. சுமார் 50 ஆயிரம் செய்தி நிறுவனங்கள் டெய்லிஹன்டில் இருக்கிறது. இதன் மூலமாக பல்வேறு செய்திகள் மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 350 மில்லியன் பார்வையாளர்கள் மாதம் அதனை உபயோகம் செய்கின்றனர்.
OneIndia: கடந்த 2006ம் ஆண்டு Oneindia.com என்ற பத்திரிகை தொடங்கப்பட்டு, பல மொழிகளில் செய்திகளை வழங்கி வருகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி உட்பட பல மொழிகளில் ஒன் இந்தியா செய்திகளை வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நிறுவனமாக அது செயல்பட்டு வருகிறது.