Delhi Tent Collapse (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 17, டெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானம், இந்தியாவில் நான்காவது மிகப் பெரிய விளையாட்டு மைதானங்களில் ஒன்றாகும். இங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அனைவரும் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்கலாம். இந்நிலையில், இன்று விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

பந்தல் சரிந்து விபத்து: அச்சமயம் திடீரென பந்தல்கள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த ஏழு தொழிலாளர்கள் காயம் அடைந்து இருக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப்படை அதிகாரிகள், விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த போது பல தொழிலாளர்கள் உணவு சாப்பிட புறப்பட்டு சென்று இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி விப விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.