ஜனவரி 2, சுல்தான்பூரி: டெல்லியில் உள்ள சுல்தான்பூரி (Sultanpuri, Delhi) பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு அஞ்சலி சிங் (வயது 20) என்ற பெண்மணி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
அவர் சுல்தான்பூரியில் இருந்து கன்ஜஹவாலா (Sultanpuri to Kanjhawala) பகுதிக்கு சென்றுகொண்டு இருக்கும்போது, அவரின் இருசக்கர வாகனத்தில் மோதிய கார், அஞ்சலி வாகனத்தில் சிக்கியுள்ளதை அறியாமல் 4 கி.மீ தூரத்திற்கு இழுத்து வந்துள்ளது.
இதனால் பெண்ணின் உடையெல்லாம் கிழிந்து, ஆடை இன்றி அரைநிர்வாணத்துடன் சடலமாக சாலையோரத்தில் கிடந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Police Help Bird : அந்தரத்தில் சிக்கிய காகத்திற்கு கருணை காண்பித்த காவலர்.. அன்பும், துணிவும் இருந்தால் ஆபத்தும் அல்வா தான்.!
சுல்தான்பூரி காவல் துறையினர் விசாரணை நடத்த தொடங்குகையில், பெண்ணின் மரணம் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. மேலும், பல அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த தொடங்கினர்.
பெண் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளில் பெண்ணின் சடலம் இழுத்து வரப்பட்டு சாலையில் போடப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த விவகாரத்தில் 5 பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் பாஜக பிரமுகர் மனோஜ் மிட்டல் உட்பட 5 பேர் கைதாகியுள்ளதால், எதிர்க்கட்சியினர் அதனை தீவிரமாக கையில் எடுத்து பெண்ணுக்கு நீதி வேண்டும் என போராடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பெண்ணின் மரணம் என்பது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்றும் கூறி வருகின்றனர்.
CCTV footage of #delhigirl killed on Sunday goes viral.
It's a clear case of rape and murder. #Delhiaccident pic.twitter.com/jXv38bFlWy
— Jyotsana Melbourne (@JyotsanaMelborn) January 2, 2023