நவம்பர் 07, புதுடெல்லி (New Delhi): கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்தியாவில் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாடுகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தீபாவளி பண்டிகையின்போது, இந்திய அளவில் பட்டாசுகளை வாங்கி மக்கள் வெடித்து மகிழுவது வழக்கம்.
இதனால் கடுமையான அளவு காற்றுமாசு, ஒலிமாசு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. இதனையடுத்து, இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், 2018ல் பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதித்தது.
மேலும், மாநில அளவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு கால அளவு நிர்ணயம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளாக பட்டாசுகளை வெடிக்க மாநில அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. Egg Benefits: அடடே.. ஆயில் அதிரடி தகவல்.. முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவதால் இவ்வுளவு நன்மைகள்.!
காலை 6 மணிமுதல் 7 மணிவரை ஒருமணிநேரம், இரவு 7 மணிமுதல் 8 மணிவரை ஒருமணிநேரம் என 2 மணிநேரம் மட்டுமே அன்றைய நாளில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக பட்டாசுகள் வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைப்போல, ராஜஸ்தானிலும் பட்டாசுகள் விற்பனைக்கு தடை கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேலும், நீதிமன்றத்தின் கடந்த 2018 உத்தரவை செயல்படுத்தவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஏ.எஸ் பூபண்ணா, எம்.எம் சுந்தரேஷ் அமர்வு, "ஒட்டுமொத்த இந்தியாவிலும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2018ல் விதிக்கப்பட்ட தடை தொடரும். மாசுபாடை கட்டுப்படுத்துவது நீதிமன்றத்தின் கடமை" என தெரிவித்தனர்.