EPF (Credit: PTI)

டிசம்பர், 11: ஒவ்வொரு தனிமனிதனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசினால் சட்டமாக அமல்படுத்தப்பட்டு குறிப்பிட்ட தொகை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இது தொழிலாளர்களாக உழைத்து வாழும் மனிதரின் எதிர்காலத்தில் பேருதவி செய்கிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதியானது (EPF) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வரும் தொழிலாளர்களுடைய எதிர்கால நலனை கருதி, மாத சம்பளத்தில் தொழிலாளர் & வேலை நிறுவனம் சார்பில் பங்காளிக்கப்படும் தொகை பணி ஓய்வு பெறப்பட்ட பின்னர் மீண்டும் வழங்கப்படும். இதுவே ஆங்கிலத்தில் Employees Provident Fund (EPF) என்று அழைக்கப்படுகிறது. #HoneyBee: தேனீ கொடுக்கில் இவ்வுளவு மருத்துவ மகத்துவம் இருக்கிறதா?.. அசரவைக்கும் உண்மை தகவல்., ஆனாலும் கவனம் தேவை.! 

கடந்த 1952ம் ஆண்டு ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி தொடங்கப்பட்ட இத்திட்டம், 1971ல் ஓய்வூதிய திட்டத்தையும் சேர்க்க வழிவகை செய்தது. இந்த திட்டத்தின்படி, ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 12% வருங்கால வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்படும். ஊழியரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் அதே தொகையை நிறுவனமும் வழங்க வேண்டும். இதுதவிர்த்து, ஊழியருக்கு விருப்பம் இருந்தால் கூடுதலாக 12 % பிடித்தம் செய்ய முறையிடலாம்.

இன்றைய சட்டதிட்டத்தின் படி குறைந்தபட்சம் ரூ.6,500 சம்பளம் பெரும் நபருக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அந்த தொகைக்கு 8.65% வட்டியும் வழங்கப்டுகிறது. EPF வரவுகளை நாம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள UAN நம்பர் மூலமாக இணையவழியிலேயே இன்றளவில் கண்டறியலாம்.

7738299899 என்ற எண்ணுக்கு EPF கணக்கில் பதிவு செய்த எண்ணில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பினால், SMS வாயிலாக நமது EPF கணக்கில் இருப்பு விபரங்களை அறிந்துகொள்ளலாம். epfindia.gov.in என்ற இணையத்திற்கு சென்றும் நமது கணக்கில் செலுத்தப்பட்டுள்ள பணம் தொடர்பான விபரத்தை பார்க்கலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 03:55 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).