மார்ச் 20, புதுடெல்லி (New Delhi): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு (UPSC Prelims 2024) ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DMK LS Manifesto: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.. இனி சிலிண்டர் விலை 500, பெட்ரோல் விலை 75..!
முன்னர் யூ.பி.எஸ்.சி. தேர்வு மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வானது ஜுன் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.