Tamil Nadu CM MK Stalin (Photo Credit: @ANI X)

மார்ச் 20, சென்னை (Chennai): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பி தலைமையில் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையின் (DMK Manifesto) இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin), லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் குறிப்பாக, திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும், தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும், ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். RCB Name Change: ஆட்டோ கண்ணாடியைத் திருப்பிய ஆர்சிபி.. இந்த முறை மிஸ் ஆகாது..!

அதேபோல இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 500 ரூபாயாகக் குறைக்கப்படும், பெட்ரோல் 75 ரூபாயாகவும் டீசல் 65 ரூபாயாகவும் குறைக்கப்படும். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்,ஐஐஎஸ்சி, ஐஐஏஆர்ஐ ஆகியவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும். சென்னையின் மூன்றாவது ரயில் நிலையம் அமைக்கப்படும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல்: மேலும் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தூத்துக்குடி- கனிமொழி, தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார், வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி, தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், மத்தியசென்னை- தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் - ஜி.செல்வம், அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை- அண்ணாதுரை, தர்மபுரி- ஆ.மணி, ஆரணி-தரணிவேந்தன், வேலூர்- கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சி- மலையரசன், சேலம்-செல்வகணபதி, கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார், பெரம்பலூர் - அருண் நேரு, நீலகிரி - ஆ.ராசா, பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி, தஞ்சாவூர் - முரசொலி, ஈரோடு-பிரகாஷ், தேனி- தங்க தமிழ்செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.