Investigation File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 21, கலபுரகி (Karnataka News): கர்நாடக மாநிலம், கலபுரகியை (Kalaburagi) சேர்ந்தவர் விகாஸ் (வயது 18). இவர், மங்களூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அங்குள்ள பிஜி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் மோசமான சுகாதாரம், அசுத்தமான கழிப்பறைகள் மற்றும் உணவில் பூச்சிகள் இருப்பதைக் காரணம் காட்டி கூகிளில் தங்கியிருப்பதற்கு ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளார். Self-Surgery: யூடியூப் பார்த்து தனக்குத்தானே வயிற்றைக்கிழித்து அறுவை சிகிச்சை; வீரியம் குறைந்ததும் ஐயோ., அம்மா கதறல்.. மருத்துவமனையில் அனுமதி.!

பொறியியல் மாணவர் காயம்:

இதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் தேதி இரவு, பிஜி உரிமையாளர் சந்தோஷ், விகாஸை மிரட்டி, அந்தக் கருத்தை நீக்கக் கோரினார். விகாஸ் மறுத்ததால், சந்தோஷ் உட்பட 4 பேர் அவரைத் தாக்கி, வலுக்கட்டாயமாக அந்த மதிப்பாய்வை நீக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்பேரில், பிஜி உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.