Daughter Honour Killing in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 19, பாக்பத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் (Baghpat) பரோட் காவல் நிலையப் பகுதியின் லுஹாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவானி (வயது 22). ஷிவானியும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான அங்கித் என்ற வாலிபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும், அவர்கள் இளம்பெண்ணை வீட்டில் பூட்டி வைத்தனர். அப்போது, அவர் தனது முடிவில் உறுதியாக இருந்து தான் அவரை திருமணம் செய்துகொள்ளபோவதாக கூறியுள்ளார். இதற்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். Spicejet SG 2696 Flight: ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 2696 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறக்கம்..!

இளம்பெண் கழுத்து நெரித்து கொலை:

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 17) இரவு, பெண்ணின் குடும்பத்தினர் அவரது கழுத்தை நெரித்து கொன்று, உடலை யமுனை நதிக்கரைக்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். மறுநாள் காலை ஷிவானியின் மொபைல் செல்போன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காதலன் அங்கித், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண்ணை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை (Murder) செய்தது தெரியவந்தது.

3 பேர் கைது:

இதனையடுத்து, ஷிவானியின் தாய் பபிதா, தந்தை சஞ்சீவ், மூத்த சகோதரர் ரவி மற்றும் உறவினர் சகோதரி மீது காதலன் அங்கித் புகார் அளித்துள்ளார். போலீசார் பபிதாவையும் சஞ்சீவையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, இருவரும் தங்கள் மகள் தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அதனால் அவளைக் கொன்றதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, ஷிவானியின் தாய், தந்தை மற்றும் உறவினர் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பெற்ற மகளை ஆணவக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.