ஜூன் 19, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட ஹைதராபாத்-திருப்பதி ஸ்பைஸ்ஜெட் விமானம் (Hyderabad-Tirupati SpiceJet flight SG 2696) அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகப் புகாரளித்த பின்னர், SG 2696 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. மேலும், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாக, PRO, GMR உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவசரமாக தரையிறங்குவதற்கான காரணத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளது. Operation Sindhu: ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் சிந்து'.. மாணவர்கள் மகிழ்ச்சி.!

ஹைதராபாத்-திருப்பதி ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 2696 விமானம், தொழில்நுட்பக் கோளாறுகளுக்கான விளக்கம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)