Lady Constable Dies in Car Accident (Photo Credit: @SimranBabbar_05 X)

ஜூன் 13, பாட்னா (Bihar News): பீகார் மாநிலம், பாட்னாவில் (Patna) வாகன சோதனையின்போது, கார் மோதி பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். தலைநகர் பாட்னாவில் உள்ள அடல்பாத் பகுதியில், நேற்று (ஜூன் 12) அதிகாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த காரை நிறுத்தும்படி காவல்துறையினர் சைகை காட்டினர்.  Viral Video: வீட்டில் இருந்த சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

பெண் காவலர் பலி:

இதனையடுத்து, காரை மெதுவாக ஓட்டிய ஓட்டுனர் திடீரென, வேகமாக ஓட்டினார். வேகமாக வந்த கார் மோதியதில் (Car Accident) கோமல் குமாரி என்ற பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 காவலர்கள் பல அடி துாரம் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே, அப்பகுதி மக்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காயமடைந்த காவலர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். காரில் வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனையின்போது, கார் மோதி பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: