Fire breaks out at laddu Counter in Tirupati (Photo Credit: @Bavazir_network X)

ஜனவரி 13, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், திருப்பதியில் (Tirupati) சமீபத்தில் பேசுபொருளாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் லட்டு விவகாரம் இருந்தது. திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில், சில நாட்களுக்கு முன்பு திருப்பதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் முன்பதிவுக்காக கூட்டத்தில், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. Law Student Dies: நண்பரின் வீட்டில் நடந்த பார்ட்டி; 7வது மாடியில் இருந்து விழுந்து மாணவர் பலி..!

தீ விபத்து:

இந்நிலையில் தற்பொழுது திருப்பதியில் லட்டு விநியோகிக்கும் (Tirupati Laddu Counter) செய்யும் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 47ஆம் எண் கொண்ட லட்டு விநியோகம் செய்யும் மையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு கவுன்டரில் தீ விபத்து: