Dead Body (Photo Credit: Pixabay)

ஜனவரி 13, நொய்டா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தபாஸ். இவர், நொய்டாவில் (Noida) உள்ள தனியார் பல்கலையில் சட்டம் பயின்று வந்தார். நொய்டாவின், செக்டார் 99 பகுதியில் உள்ள சுப்ரீம் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில், 7வது மாடியில் உள்ள நண்பரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் பங்கேற்க, தபாஸ் கலந்துகொண்டார். Road Accident: லாரி மீது டெம்போ மோதி விபத்து; 8 பேர் பலியான சோகம்..!

தவறி விழுந்து உயிரிழப்பு:

அப்போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து அவர் தவறி விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது விபத்தா, கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.