மே 16, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள முட்டிகே என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் (வயது 13), சாத்விக் (வயது 11), பிருத்வி (வயது 12), விஷ்வா (வயது 12) ஆகிய 4 பேரும் தனது நண்பர்களுடன் திம்மனஹள்ளி ஏரிக்கு (Lake) குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறுவனின் கால் சேற்றில் சிக்கியது. Medical College Student Suicide: ஆன்லைன் ரம்மி விளையாட்டு; பணத்தை இழந்த சோகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை..!

இதனையடுத்து, அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்ற சிறுவர்களும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். இந்த தகவலை ஒரு சிறுவன் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்த போது, அவர்கள் இதனை அலட்சியமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். பின், தனது குழந்தைகளை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடியுள்ள நிலையில், அப்போது அந்த சிறுவன் தனது கிராமமான முட்டிகேவிற்கு சென்று அவர்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 4 சிறுவர்களும் அங்கு பிணமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.