Hanging Suicide (Photo Credit: Pixabay)

மே 16, கொருக்குப்பேட்டை (Chennai News): சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை, ஜே.ஜே. நகர் பகுதியை சேந்தவர் தனுஷ் (வயது 23). இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தனுஷ் ஆன்லைனில் ரம்மி (Online Rummy) விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதில், கட்டிய பணத்தை இழந்ததால், பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று அவரது தந்தையிடம் ரூ.24,000 பணம் கேட்டுள்ளார். அதற்கு, அவர் இவ்வளவு பணம் என்னிடம் இல்லை எனக் கூறி, ரூ.4,000 மட்டும் கொடுத்துள்ளார். Egg Candy Recipe: சுவையான முட்டை மிட்டாய் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

இதையடுத்து, ரூ.4,000 பணத்துடன் அறையின் உள்ளே சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவரது பெற்றோர், தனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் தனுஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், தனுஷின் செல்போனை கைப்பற்றி காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு, கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள், அடுத்தடுத்து தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.