Indonesia Ministers India Visit | Kuch Kuch Hota Hai Poster (Photo Credit: @ANI X)

ஜனவரி 26, புதுடெல்லி (New Delhi): இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ (Prabowo Subianto), அரசுமுறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு வழங்கி இருந்தனர். அதனைத்தொடர்ந்து, அவர் இந்திய குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவிருக்கிறார். இதனிடையே, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பரம்பரியபடி இந்தோனேஷிய குழுவினருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளித்து விருந்து வழங்கி இருந்தார். அப்போது, இஷானிஷிய மூத்த அமைச்சர்கள் குழு, ஷாருக்கானின் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான குச் குச் ஹோதா ஹை (Kuch Kuch Hota Hai) படத்தின் பாடலை பாடி மகிழ்ந்து இருந்தனர். Tamil Nadu Govt Awards: சிறந்த காவல் நிலையம், காவலர்கள் விருதை தட்டிச்சென்றவர்கள் யார்? முழு விபரம் இதோ.! குடியரசு தின கொண்டாட்டம் 2025.! 

மொழி, தேசங்களை கடந்து வெற்றிபெற்ற படம்:

கடந்த 1998ல் வெளியான இப்படத்தில் ஷாருக்கான், கஜோல், முகர்ஜி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். காதலர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம், இன்று வரை மொழிகளை கடந்து காதல் காவியமாகவும் இருக்கிறது. உலகளவில் இந்த படத்தின் வெளியீடுக்கு பின்னர், ஷாருக்கானுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டாகியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஷாருக்கானுக்கு என தனி ரசிகர் படையும் உருவாகியது. இந்தியா-வெளிநாடுகளில் மொழிகள், தேசம் என்ற விஷயத்தை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்தோனேஷிய அமைச்சரவை குழு பாடலை பாடி மகிழ்ந்து இருக்கிறது. 76 வது இந்திய குடியரசு தின விழாவில், இந்தோனேஷிய அதிபர் சிறப்பு விருத்தினராகவும் கலந்துகொள்கிறார்.

குச் குச் ஹோதா ஹை பாடலை பாடி மகிழ்ந்த இந்தோனேஷிய அமைச்சர்கள்: