மே 23, ஜம்மு-காஷ்மீர் (SriNagar, Jammu-Kashmir): அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷியா, ஜப்பான், இத்தாலி, இந்தோனேஷியா, பிரேசில், ஆஸ்திரேலியா உட்பட 20 நாடுகள் அங்கமாக கொண்ட G20 நாடுகளின் (G20 Countries) மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. மே மாதம் 22 & 23ம் தேதியில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா குழு தொடர்பான ஆலோசனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் (Jammu Kashmir) இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முக்கிய இடங்களில் இராணுவம் சோதனை நடத்தி வருகிறது. சுமார் 20 நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சுற்றுலா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Karur Aged Couple Killed: மாந்தோப்பில் வயதான ஜோடி கொடூர கொலை; நகை, பணம் திருட்டு..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
இந்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று இந்திய திரைப்பட நடிகர் ராம் சரண் (Ram Charan at SriNagar) கலந்துகொண்டு இருந்தார். இந்த நிலையில், நேற்று மற்றும் இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள டால் ஏரியில் (Dal Lake) சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டவரும் படகுகளில் இன்பமாக பயணிக்கின்றனர்.
#WATCH | J&K: G20 delegates enjoy shikara ride at Dal Lake in Srinagar.#G20InKashmir pic.twitter.com/1BGoomoDnl
— ANI (@ANI) May 22, 2023