Gang Rape (Photo Credit: Pixabay)

ஜனவரி 14, புதுச்சேரி (Puducherry News): புதுச்சேரியில் காலாப்பட்டில் (Kalapet) தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இளநிலை, முதுநிலை என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து முதலாமாண்டு இளநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார். Virat Kohli Restuarant: சோளத்துக்கு ரூ. 525..? விராட் கோலியின் உணவகத்தை விமர்சித்த பெண்.. வைரல் பதிவு உள்ளே..!

கூட்டு பலாத்கார முயற்சி:

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 12) விடுமுறை என்பதால், இந்த பெண் தனது காதலனுடன், கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென வந்த 3 பேர் கும்பல், அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. பின்னர், அங்கிருந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் (Rape Attempt) செய்ய முயற்சித்துள்ளனர். மாணவி கத்தி கூச்சலிடவே, பயந்து போன கும்பல் அவரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

தீவிர விசாரணை:

இதில், படுகாயமடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு, பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பியுள்ளார். பின்னர், இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3