டிசம்பர், 10: உலகளவில் ஆண்டிராய்டு (Android Phone) போன்களுக்கு தேவையான ஆப்களை வழங்கும் ஒரே இடம் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store). அதன் மூலமாக நமக்கு தேவையான கேம்கள், பிற ஆப்கள் என பலவகையானவற்றை டவுன்லோட் செய்து வருகிறோம்.
பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களில் அனைத்தும் பாதுகாப்பானவை அல்ல. ஏனெனில் அவற்றில் பல போலியான மற்றும் உளவுச்செயலிகளும் உள்ளன. இவ்வாறானவற்றை நாம் தெரிந்தோ / தெரியாமலோ பதிவிறக்கம் (Download) செய்தால் நமது தனிப்பட்ட தகவல் திருடப்படும்.
இவ்வாறான செயலிகள் நமது வங்கிதொடர்பான விபரங்கள், சமூக வலைதளக்கணக்குகளின் கடவுச்சொல், நமது போட்டோக்கள் போன்றவற்றை திருடும் (Data Theft, Hacking). Student Parent Advice Exam: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்: பெற்றோராக உங்களின் பிள்ளைக்கு செய்ய வேண்டியது என்ன?..!
அந்த திருட்டை ஊக்குவிக்கும் நபர்கள் நமது தனிப்பட்ட தகவல்களை பெற்று, அவர்கள் தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். சில நேரங்களில் நமது போட்டோக்களை திருடி மாபிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயலும் நடைபெறும்.
இவ்வாறாக நமது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, உபயோகம் செய்து வரும் செயலிகளில் கீழ்காணும் 4 வகையானவை ஆபத்தானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவைகள் 1 மில்லியன் பயனர்களை பெற்றுள்ளது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.
- Bluetooth Auto Connect,
- Bluetooth App Sender,
- Driver: Bluetooth, WiFi, USB,
- Mobile Transfer
- Smart Switch
மேலுள்ள 5 செயலிகளும் வைரசால் நிரம்பியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இவ்வகை செயலிகளில் உள்ள விளம்பரங்களின் வழியே செல்போன்களில் வைரஸ் ஊடுருவுகிறது, தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று உங்களின் செயலியில் இருந்தால் அவைகளை Uninstall செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.