ஜுலை 10, அகமதாபாத் (Ahmedabad News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மிட்டகல்லி பகுதியில் சில நாட்களாகவே (Gujarat Rains) கனமழையானது பெய்து வந்தது. இந்த நிலையில், அப்பகுதியில் இருக்கும் சோராணி காளி தெருவில் வீடு ஒன்று காலை ஏழு முப்பது மணியளவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜே.சி.பி இயந்திர உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் 5 பேர் சிக்கியிருந்த நிலையில், முதலில் 13 வயது சிறுமியை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
பின் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த பெண் உட்பட 5 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் நால்வருக்கு லேசான காயமும், ஒருவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டு இருந்தது.
அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் இருந்து அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அமித் ஷா, மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடையே கலந்து ஆலோசித்தார்.
பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்து ஆறுதல் கூறினார்.
தென்மேற்கு பருவ மழையின் காரணமாக இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்கள், வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்கள் கடுமையான மழைப்பொழிவை சந்தித்து உயிரிழப்பையும் எதிர்கொள்கின்றன.