Cow Attacked Youngster (Photo Credit: Twitter)

செப்டம்பர் 04, குஜராத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் காரணமாக மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தினம் ஒரு சோகம் என மாடுகளால் மக்களின் உயிர் கேள்விக்குறியாகி வருகிறது.

தெருவில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகள், சில நேரங்களில் மக்களை தாக்கி கொல்வது, முட்டுவது, வாகனங்களை துரத்தி தாக்குவது என தொடரும் சேட்டைகளால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பஞ்சாபில் 83 வயது முதியவர் காளை மாட்டின் கால்களில் சிக்கி சாலைகளில் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டார். Coach Running Without Engine: எஞ்சின் இல்லாமல் பின்னோக்கி ஓடிய இரயில்; பதறிப்போன பொதுமக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.! 

கடந்த மாதம் மட்டும் நூற்றுக்கணக்கில் அகமதாபாத் மக்கள் தெருவில் அலையும் மாடுகளால் ஆபத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில், அகமதாபாத், மேஷானா பகுதியில் காளை மாடு இளைஞனை துரத்தி கொம்புகளால் முட்டி மிதித்த பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.

தெருவில் கேட்பாரற்று அலையும் மாடுகளின் கொட்டத்தை ஒடுக்க, அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மக்கள் மாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகியுள்ளது.