மே 06, கொப்பல் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் தாலுகா, உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் அங்குள்ள உள்ள சாலையோர பகுதிகளிலும் மற்றும் மண்டபங்களில் தங்கி வந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். Minor Girl Injured After Bitten By Pet Dog: வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்; மருத்துவ செலவை அதன் உரிமையாளர் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி..!

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இவரிடம் ஒரு குழந்தையை விலைக்கு வாங்கி உள்ளது, அங்குள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அந்த பெண்ணிடம் அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து, அந்த குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், விசாரித்ததில் அந்த பெண்ணுக்கு மது அருந்தும் பழக்கம் (Alcohol Drinking Habit) இருந்துள்ளது. இதனால் அவருக்கு மூன்றாவதாக பிறந்துள்ள 4 மாதங்களே ஆன பெண் குழந்தையை, அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.100-க்கு விற்பனை செய்துள்ளார்.

மது அருந்த பணம் இல்லாத நிலையில் இவ்வாறு செய்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, எந்த ஊர் என்னவென்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.