Shimla Bus Accident Landslide Visual (Photo Credit: ANI Twitter)

ஆகஸ்ட் 12, ஹிமாச்சலப்பிரதேசம் (Himachal Pradesh News): ஹிமாச்சலப்பிரதேசம் மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு (HRTC) சொந்தமான பேருந்து, சுந்தரநகர் பகுதியில் இருந்து சிம்லா நோக்கி இன்று பயணம் செய்துகொண்டு இருந்தது. பயணிகள் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

பேருந்து சிம்லா (Shimla) நோக்கி பயணம் செய்த நிலையில், இடையில் இன்று காலை மண்டி (Mandi Distrcit) மாவட்டத்தில் சென்றபோது விபத்திற்குள்ளானது. இப்பேருந்து சாலையில் பயணம் செய்தபோது, எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. Celebrities Watch FDFS: ஜெயிலர் படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?..!

அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், பேருந்து உருண்டு நின்றது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் உயிர் பயத்தில் அலறிப்போயினர். 4 பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நிலம் சரிந்து பேருந்து விபத்தில் சிக்கி இருப்பது முதற்கட்டமாக உறுதியாகியுள்ளது.