Pan Card (Picture Credits: PTI)

டிசம்பர், 6: நிரந்தர வங்கிக்கணக்கு எண் என்று அழைக்கப்படும் பான் கார்ட் (Pan Card), இந்திய குடிமகனின் அடையாளம். ஆதார் ஆவணம் என்றால், வரி மேலாண்மை நோக்கத்திற்கு பாண் கார்டு கொண்டு  வரப்பட்டது. இவை இரண்டும் முக்கியமான ஒன்றாகும். பான் எண் இல்லாமல் எவ்வித நிதி பரிவர்த்தனையையும் நாம் மேற்கொள்ள இயலாது.

நமது வருமானத்தை வங்கியில் பெறுவதன் மூலமாகவும், முதலீடுகள் தொடர்பான நிதி பரிவர்த்தனையும் வருமான வரித்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேன் கார்டை ஆன்லைன் முறையில் பெற https://tin.tin.nsdl.com/pan/index.html என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். GP Muthu: ஓவர் நைட்டில் இந்திய அளவில் பேமஸ்.. பழமொழியை மெய்ப்பித்து காண்பித்த ஜி.பி முத்து.. டக்கரான சம்பவம்.!

இந்த இணைப்புக்குள் சென்றதும் இணையவழியில் Pan Card பதிவு செய்வதற்கான நிரப்புதல் படிவம் தோன்றும். அதனை பூர்த்தி செய்து Submit கொடுத்தால் நமக்கு இணையவழியில் பேன் கார்டை pdf பார்மெட்டில் டவுன்லோட் செய்யலாம். மேலும், கூடுதல் தொகை செலுத்தினால் நேரடியாக நமது முகவரிக்கு பேன் கார்ட் அனுப்பி வைக்கப்படும்.

இணையவழியில் பூர்த்தி செய்பவர்களின் ஆதாரில் இருக்கும் புகைப்படமே முதலில் எடுத்துக்கொள்ளப்படும். அதனை மாற்றும் நடைமுறை விரைவில் இணையவழிக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எழுத்து வடிவில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பேன் கார்ட் பெறுவோருக்கு அவர்கள் அளித்த போட்டோவில் பேன் கார்ட் கிடைக்கும்.

பேன் கார்டுக்கு விண்ணப்பிக்க: https://tin.tin.nsdl.com/pan/index.html https://tin.tin.nsdl.com/pan/index.html 

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 6,2022 06:47 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).