டிசம்பர், 8: இந்தியாவில் தனிமனிதனின் அடையாள அட்டையாகவும், அரசு விவகாரங்களில் முக்கிய ஆவணமாகவும் கருதப்படுவது ஆதார் (Aadhar Card). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் விபரங்கள் தற்போது ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடிமகனாக இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கு என தனி ஆதாரும் கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சியடையும் தன்மை கொண்டது என்பதால், அவர்களுக்கு என 5 வயது வரை செல்லுபடியாகும் ஆதார் கொண்டு வரப்பட்டுள்ளது.
5 வயதுக்கு மேல் புதுப்பிப்பு அவசியம்: இந்த ஆதாரை 5 வயதுக்கு மேல் கட்டாயம் மாற்றிவிட அல்லது புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் அவை 5 வயதுக்கு மேல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதில், குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவது எப்படி என்பதை இன்று காணலாம். அரசின் சார்பில் தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் உள்ள ஆதார் அலுவலகத்திற்கு சென்று குழந்தைகளுக்கான ஆதார் கார்டை பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம். Electricity Safety: மழைக்காலத்தில் மின்சார பொருட்கள் உபயோகத்தில் கவனம்.. என்னென்ன செய்ய வேண்டும்?.. ஆலோசனைகள் இதோ.!
இ-சேவை மையம்: ஆதார் அலுவலகத்திற்கு செல்லும் முன்பு குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழை சரிபார்ப்புக்காக கொண்டு செல்ல வேண்டும். குழந்தையின் தாய்/தந்தை கை ரேகை, அவர்களின் ஆதார் நம்பர் போன்றவற்றை இணைத்து 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு என ஆதார் கார்டு வழங்கப்படும்.
இந்த ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்கான ஆதார் கார்டு வழங்கப்படும். 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பயமொமெட்ரிக் முறையில் கண்கள் மற்றும் கைரேகை போன்றவை பதிவு செய்யப்படமாட்டாது. 5 வயதுக்கு பின்னரே குழந்தைகளின் கண்கள் மற்றும் கைரேகை போன்றவை புதுப்பிக்கப்படும்.
15 வயதுக்கு மேல் மீண்டும் புதுப்பிப்பு: 5 வயதுக்கு பின்னர் குழந்தைகளின் ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்துவிட்டால் மீண்டும் 15 வயதில் அவர்களின் விபரங்களை சரியாக பூர்த்தி செய்து பயோமெட்ரிக் விபரங்களை அப்டேட் செய்யவும். இதுவே குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறும்/பதிவேற்றம் செய்யும் முறை ஆகும்.