டிசம்பர், 7: தனிமனிதரின் அடையாளமாக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் (Aadhar Card), இன்றளவு ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இந்தியர்களின் தரவுகளையும் அரசு எளிதில் கண்காணிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய அரசு அறிவிப்புகள் சரியான வகையில் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டும் ஆதார் அவசியமாக்கப்பட்டது.
குழந்தை ஆதார்: ஆதார் அட்டையில் இன்றளவில் குழந்தைகளுக்கு என தனி ஆதார் வழங்கப்படுகிறது. அவை 5 வயது வரை செல்லுபடியாகும். பின்னர், குழந்தைகளுக்கான ஆதாரை 5 வயதுக்கு மேல் மாற்றம் செய்ய வேண்டும். அரசு ஆவணங்களை பொறுத்த வரையில், நமது விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே அவற்றை அவசர நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டிய வீண் அலைச்சல்கள் குறையும்.
இ-சேவை மையம் (E-Seva Center): அந்த வகையில், ஆதாரில் இருக்கும் முகவரியை திருத்தும் செய்வது எப்படி? என இன்று தெரிந்துகொள்ளலாம். இன்றளவில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அல்லது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தின் வாயிலாக பதிவு செய்து ஆதாரில் முகவரி திருத்தும் செய்யலாம். திருத்தப்பட்ட ஆதார் கார்டு பிரதியையும் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். Pakarkai Sambar: கசப்பே இல்லாமல் சுவையான பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. சூப்பர் டிப்ஸ்.!
இணையவழியில்: https://myaadhaar.uidai.gov.in என்ற இணையப்பக்கத்திற்கு சென்று, Login என்ற எழுத்தை Click செய்ய வேண்டும். பின்னர், அதில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து செல்போனுக்கு வந்த OTP மூலமாக உள்நுழைய வேண்டும். அதில் உள்ள விபரங்களை தமிழில் படிக்கும் வகையிலும் அமைப்புகள் உள்ளன. அதனை தேவை என்றால் தேர்வு செய்துகொள்ளலாம்.
உள்நுழைந்ததும் முகவரி மாற்றத்திற்கான அமைப்புக்குள் சென்றால், தகுந்த விபரங்கள் கேட்கப்படும். அதில் சென்று நமது முகவரியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டும். முகவரி மாற்றத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் அது பதிவேற்றம் செய்யப்படும். இவை அனைத்தையும் பூர்த்தி செய்து இணையவழியில் ரூ.50 கட்டணம் செலுத்தினால் முகவரி மாறிவிடும்.
Website Link: https://myaadhaar.uidai.gov.in