ஜூன் 04, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி (IAS Officer) விகாஸ் ரஸ்தோகி என்பவர், மாநில அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை முதன்மை செயலாளராக இருக்கிறார். இவரது மனைவி ராதிகா ரஸ்தோகியும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார். இவர்கள் இருவரும் நரிமன்பாயின்ட் பகுதியில் அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். Wife Stabbed Her Husband: மதுபோதையில் தகராறு; கணவனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண் கைது..!
இவர்களின் மகள் லிபி ரஸ்தோகி (வயது 26), அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாத்தில் கல்லூரி ஒன்றில் எல்.எல்.பி. படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இவரது பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, இவர் கட்டிடத்தின் 10-வது மாடியில் (Jumping Suicide) இருந்து குதித்துள்ளார். பின்னர், அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அவரது அறையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், அவர் தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார். மேலும், இவர் கல்லூரி படிப்பில் எதிர்பார்த்த அளவில் மதிப்பெண் எடுக்காததால், மிகவும் விரக்தியுடன் இருந்துள்ளார். இதனால்தான், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.