ஆகஸ்ட் 03, சென்னை (Job News Tamil): இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐபிபிஎஸ் (IBPS) காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு அதற்கு தகுதியானவர்களை தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து பணியமர்த்துகிறது. அதன்படி முதற்கட்டமாக வங்கிகளில் கிளர்க் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. "பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்" - போலீசாரின் சர்ச்சை போஸ்டர்.!
பணி விபரங்கள் :
- பணி : வாடிக்கையாளர் சேவை அதிகாரி அல்லது கிளர்க்
- காலிப்பணியிடங்கள் : 10,277
- கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மாத சம்பளம் : ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை
- வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்வு முறை : முதன்மை தேர்வு, மெயின் தேர்வு
- தேர்வு மையங்கள் : சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், குமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர்
- விண்ணப்ப கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.175
- விண்ணப்பிக்க இறுதி நாள் : 21-08-2025
- தேர்வு நடைபெறும் மாதம் : அக்டோபர் முதல் நவம்பர் வரை
- மேலும் விபரங்களுக்கு : https://www.ibps.in/wp-content/uploads/DetailedNotification_CRP_CSA_XV_Final_for_Website.pdf என்ற இணையதள பக்கத்தில் பார்க்கவும்.
IBPS கிளர்க் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி ?
- தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்திய பின் தங்களுடைய புகைப்படம் கையெழுத்து புகைப்படம் ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யவும்.
- ஆவணங்களை முறையாக பதிவேற்றிய பின் தேர்வுக்கு தயாராகலாம்.