Rs. 2,000 INR | Aadhaar Card (Photo Credit: ANI Twitter / Wikipedia)

செப்டம்பர் 01, சென்னை (Chennai): செப்டம்பர் மாதம் தனிநபர் நிதித்துறையில் மாற்றங்களை கொண்டு வரும் மாதமாக நடப்பாண்டில் அமைந்து இருக்கிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வசித்து வரும் நிலையில், அரசுத்துறை சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு இம்மாதம் இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு புதுப்பிப்பு விவகாரத்தில் தொடங்கி, ரூ.2000 பணம் செல்லுபடியாகும் காலம் (பணத்தை மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள மாதங்கள்) வரை என இம்மாதம் மக்களுக்கு நிதித்தொடர்பான விஷயங்களுக்கும், தனிநபர் தொடர்பான விஷயங்களுக்கும் முக்கியமான மாதமாக அமையப்பெற்றுள்ளது.

அரசின் அறிவிப்பு மாற்றங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, எமது லேட்டஸ்டலி பத்திரிகை சார்பில், மக்களுக்கான விழிப்புணர்வுகள் அடங்கிய செய்தித்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும். Jawan on Burj Khalifa: புர்ஜ் கலீபாவை தெறிக்கவிட்ட ஷாருக்கானின் ஜவான் திரைப்பட டிரைலர்; கொண்டாட்டத்தில் ஷாருக் ரசிகர்கள்.!

இலவச ஆதார் கார்டு புதுப்பிப்பு இறுதி கெடு (Free Aadhaar Update Deadline):

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India UIDAI) சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆதார் தகவல்களை பலரும் சிறுவயதில் அல்லது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு பெற்று இருப்பார்கள். இதனை பலரும் புதுப்பிக்கலாமல் இருந்து வருகின்றார். முன்பு கை ரேகை, புகைப்படம் போன்றவை பதிவு செய்யப்பட்டது.

டிஜிட்டல் மயமாகிவரும் இந்தியாவில் ஒவ்வொரு தரவுகளும் புதுப்பிக்கப்படும் நிலையில், ஆதாரும் புதுப்பிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தாலுகா அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆதார் சிறப்பு மையங்களில் செப்டம்பர் மாதம் 14ம் தேதிக்குள் ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொரு புதுப்பிப்பு விஷயங்களுக்கும் கட்டண சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

ரூ.2000 நோட்டுகள் மாற்றம் (Exchanging Rs 2,000 Notes Deadline):

இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகள் கலவாதியாகிவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டு, அதனை மாற்றவும் மக்களை அறிவுறுத்தியது. அதன்படி, செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் ரூ.2000 நோட்டுகளை மாற்றம் செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வங்கிகள் வாயிலாக ரூ.2000 பணத்தை நாளொன்றுக்கு தனிநபருக்கு ரூ.20,000 வீதம் மாற்றிக்கொள்ளலாம்.

டிமேட் நியமன காலக்கெடு (Demat Nomination Deadline):

டிரேடிங் மற்றும் டிமெட் வகை கணக்கு வைத்திருப்பவர்கள், செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் தனது கணக்கில் நாமினி நியமனம் செய்ய வேண்டும் என செகிருட்டி எக்சேஞ்ச் போர்ட் இந்தியா கட்டளையிட்டுள்ளது.

இரண்டாவது முன்கூட்டிய வரி காலக்கெடு (Second Advance Tax Deadline):

2023 - 24 நிதியாண்டுக்கான முன்கூட்டிய வரி இரண்டாம் தவணையை, செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரி விளக்குகள், வசூல், வரிபொருட்பு உட்பட ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான வருவாயை கொண்டுள்ள அனைவர்க்கும் டிடிஎஸ் மற்றும் டிசீஸ் வரிச்சட்டம் பொருந்தும்.