Car Accident in Palnadu Visual From Spot (Photo Credit: @bigtvtelugu X)

டிசம்பர் 08, பிரம்மனப்பள்ளி (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரம்மனப்பள்ளி மாவட்டம், அதங்கி - நார்காட்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், இன்று கார் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த கார் கீதிகா பள்ளிக்கு அருகே சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது.

நொடியில் நடந்த விபத்து:

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயத்துடன் சிலர் உயிருக்கு துடிதுடித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தோரை மீட்டு பின்துகுரல்லா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். Car Plunged into Lake: காலையிலேயே போதை? அதிவேகம்.. கார் ஏரியில் பாய்ந்து 5 இளைஞர்கள் பலி.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 

நெல்லூரை சேர்ந்தவர்கள்:

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்தவர்கள் துள்ளூர் சுரேஷ், வனிதா, யோகுலு, வெங்கடேஸ்வர் என்பதை உறுதி செய்தனர். இவர்கள் அனைவரும் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு, காவாலி மண்டலம், ஸ்ரீபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

கோவிலுக்கு சென்றுவரும்போது, அதிவேகத்தால் துயரம்:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கொண்டகத்து ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்குச் சென்றவர்கள், பின் மீண்டும் தங்களின் காரில் திரும்பியபோது விபத்து நடந்துள்ளது. அதிவேகம் காரணமாக இவ்விபத்து நடந்து இருக்கிறது. காவல்துறையினர் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உருக்குலைந்து காணப்படும் காரின் காட்சிகள்: