Banglore Women Kills Pet Dog (Photo Credit : @publictvnews X)

ஜூன் 29, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம் பெங்களூரில் மகாதேவபுரா, சின்னப்பா லே-அவுட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் திரிபர்ணா (வயது 36). மேற்குவங்க மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணி, கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். தற்போது தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கிறார். இவர் தன்னுடன் மூன்று நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். Trending Video: நடுரோட்டில் எல்லை மீறிய காதல் ஜோடி.. கண்கூசும் காட்சிகள் லீக்.! 

வளர்ப்பு நாய் துண்டு துண்டாக வெட்டிக்கொலை :

இதனிடையே கடந்த 26ம் தேதி இவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் பெண்மணியின் வீட்டில் சோதனை நடத்திய போது, அவர் தனது வளர்ப்பு நாயை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குப்பையில் வைத்தது அம்பலமானது. மேலும் அந்த அறையில் சாமி படங்களும், சர்ச்சைக்குரிய வகையில் பூஜையும் செய்யப்பட்ட ஆதாரங்கள் இருந்துள்ளன. இதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேரில் வந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

மாந்திரீக பூஜை :

விசாரணையில் பெண்மணி மாந்திரீக பூஜை செய்து நாயை கழுத்தறுத்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்தது. மன அழுத்தத்திலிருந்து விடுபட இவ்வாறு மாந்திரீக பூஜை செய்யலாம் என்ற எண்ணத்தில் நாயை கொலை செய்ததாகவும் கூறி இருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல் உறுதியான நிலையில், அவரை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது தலைமறைவாகி இருக்கிறார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் மயங்கிய நிலையில் 2 நாய்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.