செப்டம்பர் 01, சென்னை (Chennai News): சென்னை (Chennai) மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்லூரி மாணவர்கள் (College Students) இடையே, சமீபகாலமாக போதைப்பொருள் (Drug Addiction) பயன்பாடு என்பது அதிகரித்து இருந்தது. இதனை ரகசியமாக கண்காணித்து வந்த காவல்துறையினர், தொடர்ந்து குழுவின் செயல்பாடுகளை வைத்து அதிரடி சோதனைக்கும் திட்டமிட்டு இருந்தனர். இதனிடையே, நேற்று தாம்பரம் (Tambaram Police) மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் உத்தரவின்பேரில், தாம்பரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .சி.மகேஸ்வரி தலைமையில், 1000 க்கும் அதிகமான காவல்துறையினர் பொத்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் கல்லூரிக்கு (Potheri SRM College) அருகேயுள்ள பிரதான குடியிருப்பு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். Teenager Arrested: அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி மிரட்டல்; இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் பறிப்பு.. வாலிபர் கைது..!
கல்லூரி மாணவி உட்பட 21 பேர் கைது:
கல்லூரி மாணவர்கள் அதிகம் தங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தில் நடந்த சோதனையின் முடிவில், 3000 மாணவர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகள் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டன. அப்போது, கஞ்சா சாக்லேட், ஹுக்கா, ஹெராயின் உட்பட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு கஞ்சா உட்பட போதைப்பொருளை விநியோகம் செய்ததாக, கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ரௌடி செல்வமணி (29) கைது செய்யப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய புலனாய்வு காவல்துறையினர் சென்னையில் 50.65 கோடி மதிப்பிலான மெத்தப்பட்டமின் போதைப்பொருளை கைப்பற்றிய நிலையில், அதனைத்தொடர்ந்து அதிரடி சோதனையில் போதைப்பொருள் பழக்கத்தை கொண்ட மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்தும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவி உட்பட 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களில் மாணவி உட்பட 11 பேர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்திய காட்சிகள்:
#WATCH | Tamil Nadu: Police conducted raids in hostels where private college students were staying at Potheri near Chennai. 32 college students, including a woman, have been detained and kept in a private marriage hall and are being investigated separately.
Constables from the… pic.twitter.com/tZVcTfiM44
— ANI (@ANI) August 31, 2024