Delhi Air Pollution (Photo Credit: @ANI X)

டிசம்பர் 05, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகரான டெல்லியை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் விவசாய நிலங்களில் பயிர் அறுவடை முடிந்ததும், விவசாயக் கழிவுகளை அதன் நிலங்களிலேயே கொட்டி தீயிட்டு எரிக்கும் செயல்கள் பல ஆண்டுகளாக தொடருகின்றன.

அறுவடை முடிந்ததும் தொடரும் செயல்கள்: இதனால் தலைநகர் டெல்லியை சுற்றிலும் காற்று மாசுபாடு (Air Pollution) கடுமையாக அதிகரித்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அறுவடை முடியும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை மக்களை வாட்டி வதைக்கும் விஷயங்கள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. Crazy Cute Moment Video: தாமதமாக வந்த கணவரை விளாசிய மனைவியும், மனைவிக்காக யோசிக்காமல் கீழே குதித்த கணவனும்.. இப்படியும் தம்பதிகள் இருக்காங்கப்பா..! 

மழை பெய்தால் மாற்றம்: கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மிகவும் குறைந்து வந்த நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக இயற்கையாக காற்று மாசு சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மீண்டும் தற்போது காற்று மாசு அதிகரித்து இருக்கிறது.

300 புள்ளிகளை கடந்தது: டெல்லியில் உள்ள ஆனந்த விகார் பகுதியில் 340 AQI புள்ளிகளும், அசோக் விகார் பகுதியில் 315 புள்ளிகளும், ஐடிஓ டெல்லியில் 307 புள்ளிகளும், ஜஹாங்கீர்புரி பகுதியில் 332 புள்ளிகளும் காற்று மாசுவின் அளவானது பதிவாகியுள்ளது.

இயல்பு வாழ்க்கை முடக்கம்: இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போகும் சூழலும் உண்டாகியுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், விவசாய கழிவுகளின் எரிப்பு டெல்லிக்கு ஒரு தீராத தலைவலி பிரச்சினையாகவே இருந்து வருகிறது.