ஜூன் 15, காந்திநகர் (Gujarat News): குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள காந்திநகர் மாவட்டம், வ்யரே தாலுகாவில் மின்ட்கோலா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 கோடி செலவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், நேற்று பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
நல்ல வேலையாக வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த அரசு கட்டுமான பொறியாளர் நீரவ் ரத்தோட், சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக தெரிவித்தார்.
இந்த பாலம் இடிந்து விழுந்ததால் சுமார் 15 கிராமத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் மாற்று வழிப்பாதையில் நெடுந்தூரம் சென்று பயணங்களை மேற்கொள்கின்றனர்.