ஏப்ரல் 17, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): சிறப்பு சட்டம் 370 ஜம்மு காஷ்மீரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, தற்போது அங்கு முழுவீச்சிலான முன்னேற்ற பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக அங்கு நிலவி வந்த பதற்றமான சூழல் இந்திய இராணுவம் மற்றும் மாநில தீவிரவாத செயல்கள் (JK Terror Attack) ஒடுக்கும் படையின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளில் பெரும்பாலும் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பீகார் மாவட்டத்தை சேர்த்தவர்கள் ஆவார்கள். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம், பீஜ்பெஹ்ரா பகுதியில் புலம்பெயர் கட்டுமான தொழிலாளியான (Bihar Worker killed by Terrorist) ராஜா ஷாஹ் என்பவர் பணியாற்றி வந்தார். Veera Dheera Sooran Title Teaser: வெறித்தனமாக வெளியான சியான் 62 படத்தின் டைட்டில் டீசர்.. வீர தீர சூரனான விக்ரம்..!
தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் & எச்சரிக்கை: இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், நேற்று பயனராவதி ஒருவரின் சரமாரி துப்பாக்கிசூட்டில், அவர் கழுத்து மற்றும் தோள்பட்டையில் குண்டடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட ராஜா ஷாஹ், சிகிச்சை பலனின்றி சிலமணிநேரத்திற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினர், பயங்கரவாதியை தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவ்விஷயத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் மனோஜ் சின்ஹா, துப்பாக்கிசூட்டில் பலியான ராஜாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, பயங்கரவாதிகள் கடும் விளைவை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.