![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1716370622Ernakulam%2520Fish%2520Death%2520%2528Photo%2520Credit%2520%2540ANI%2520X%2529-380x214.jpeg)
மே 22, எர்ணாகுளம் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, பெரியார் ஆற்றில் நேற்று மீன்கள் பலவும் செத்து மிதந்து நீருடன் அடித்து செல்லப்பட்டன. கனமழையால் பத்தளம் மடை திறந்துவிடப்பட்ட நிலையில், மடை திறக்கப்பட்டதும் இறந்த மீன்கள் பலவும் நீருடன் அடித்து செல்லப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான காணொளிகள் செய்திகளாக வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தின. கொச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலைகள், தங்களின் தொழிற்சாலை கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஆற்றில் வெளியேற்றியதனால் மீன்கள் செத்து மிதப்பதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் மீனவர்களும் தங்களின் வருவாய் கருதி கவலையில் ஆழ்ந்து இருக்கின்றனர். Cyclone Alert: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை..!
துறைசார் விசாரணைக்கு உத்தரவு: கனமழை காரணமாக தற்போது இவ்விஷயம் அம்பாலான நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனை ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள பெரியார் ஆற்றில் எல்லோர், சேரநல்லூர், சித்தூர், பச்சளம் ஆகிய பகுதியில் ஓடும் ஆற்றின் கரையோரத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த விஷயம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், கேரளா தொழிற்துறை அமைச்சர் பி. ராஜீவும் துறைசார்ந்த விசாரணையை முன்னெடுத்து இருக்கிறார். இலட்சக்கணக்கில் மீன்களை நம்பி முதலீடு செய்தவர்கள் பலரும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆற்றில் இறந்து அடித்துச்செல்லப்பட்ட மீன்கள் அனைத்தும் கட்லா, கூரி உட்பட பல நன்னீர் மீன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Kerala: A large number of dead fish were seen floating in Periyar River, in Ernakulam. Details awaited. pic.twitter.com/tZGLBjiLc0
— ANI (@ANI) May 22, 2024