ஜனவரி 08, புல்தானா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா (Buldhana) மாவட்டம், கல்வாட், பொண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசித்து வரும் மக்கள் சமீப காலமாக முடி உதிரும் (Buldhana Hair Loss) பிரச்சனையை அதிகம் எதிர்கொண்டுள்ளனர். இந்த பிரச்சனை திடீரென அவர்களுக்கு அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை ஆய்வு பணிகள் தொடக்கம்:
இதனால் கிராமத்தில் வழுக்கை தலை உடையோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இதற்கு புல்தானா வழுக்கை வைரஸ் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நோய் சுத்தமில்லாத நீரின் காரணமாக ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை, ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. Borewell Death: 33 மணிநேர போராட்டம் வீணான சோகம்; ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி.!
கையுடன் வரும் தலைமுடி:
உச்சந்தலையில் சிறிது அரிப்பு, சில நாட்களுக்கு பின் உரோமத்தின் தன்மை சொரசொரப்புடன் மாறுதல், பின் 72 மணிநேரத்திற்குள் வழுக்கை என சில நாட்களுக்குள் அவர்களின் முடி தானாக விழுவதாக கூறப்படுகிறது. மேலும், தலை முடியை கைகளால் லேசாக கோதினாலும், அவை கையுடன் வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆண்-பெண் என கிராமமே பாதிப்பு:
ஆண்களை மட்டுமல்லாது பெண்களுக்கும் இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும்மேற்பட்டோர் வழுக்கை பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். சிலர் மக்கள் பயன்படுத்தும் ஷாம்பு காரணம் எனவும் கூறுகின்றனர்.
சுகாதாரத்துறை சார்பில் மக்கள் பயன்படுத்தும் நீரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.
முடி உதிருத்தல் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டுள்ள மக்கள்:
Buldhana Hair Loss Story : 3 दिवसात डोक्यावर पडतंय टक्कल! अजब आजाराने गावकरी हैराण...#Buldhana #Maharashtra pic.twitter.com/oMLQRhFehL
— ABP माझा (@abpmajhatv) January 8, 2025