Jalgaon Train Accident (Photo Credit: @IANS X)

ஜனவரி 22, ஜல்கோன் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கோன் பகுதியில், இன்று மாலை புஷ்பாக் இரயில் பயணம் செய்தது. இந்த இரயில் பரந்தா இரயில் நிலையம் (Paranda Railway Station) பகுதியில் சென்றபோது, திடீரென இரயிலில் இருந்து தீ விபத்து எச்சரிக்கை ஒலித்து இருக்கிறது. இதனால் பயணிகளால் இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக மற்றொரு இரயில் தண்டவாளத்தில் சென்று உயிர் பயத்தில் நின்றுகொண்டு இருந்தனர். Pune Car Accident: முதல் கியருக்கு பதிலாக ரிவர்ஸ் கியர்.. சுவரை உடைத்துக்கொண்டு விழுந்த கார்..! 

மற்றொரு டிராக்கில் இரயில் வந்ததால் சோகம்:

அப்போது, மக்கள் உச்சகட்ட பீதியில் இருந்தபோது, அந்த வழித்தடத்தில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் (Karnataka Express) இரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரயில் தண்டவாளத்தில் இருந்த 10 பயணிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 30 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். இவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து அடைப்பெற்று வருகின்றன.

இரயில் பயணிகளின் மீது மோதிய விபத்து தொடர்பான களநிலவர காட்சிகள்: