Worli Accident (Photo Credit: @LatestLY X)

டிசம்பர் 18, ஓர்லி (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, ஓர்லி (Worli) பகுதியில் செயல்பட்டு வரும் சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஒன்றில், 19 வயதுடைய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, சுரஜ் யாதவ் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று கிரைண்டரில் உணவுக்கான மசாலா பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

முன் அனுபவம் இல்லை:

இவர் ராட்சத அளவிலான கிரைண்டரில் (Worli) முன்னதாக பணியாற்றிய அனுபவம் இல்லாத நிலையில், அவரை பணியாளர்கள் வேலை நிமித்தம் காரணமாக, அறிவுரை கூட வழங்காமல் கிரைண்டரில் நிறுத்தியதாக தெரியவருகிறது. முழுக்கை சட்டை அணிந்தபடி இளைஞர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். Road Accident: லாரி மீது பேருந்து மோதி விபத்து; 6 பேர் பலி.. 10 பேர் படுகாயம்..!

பரிதாப பலி:

அப்போது, இளைஞரின் கைகள் திடீரென இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தில் சுரஜ் கைகள் இயந்திரத்தில் பிடித்து இழுக்கப்பட்டு, தலைகீழாக அவர் மெஷினில் சிக்கிக்கொண்டார். நொடியில் நடந்த துயரத்தில் படுகாயமடைந்தவர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை:

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் உணவக நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளைஞருக்கு நேர்ந்த துயரம் குறித்த அதிர்ச்சி காணொளி வைரலாகி வருகிறது.

நெஞ்சை நடுங்கவைக்கும் காட்சிகள்: இளைஞரின் கைகள் கிரைண்டரில் சிக்கி துள்ளத்துடித்த காணொளி.. எளிமையான மனம் கொண்டோர் பார்க்க வேண்டாம்...